கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து ஒட்டுமொத்த நாடும் முடக்கத்துக்குள் இருக்கையில் பத்தனைச்சந்தியில் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் (17500000) பெறுமதியான கடைத்தொகுதி நிர்மாணமொன்று பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொன்றும் தலா ஆறுபது இலட்சம் ரூபாவுக்கு வி ற்பனை செய்யப்பட்டுள்ளது.
அறுபது இலட்சம் ரூபா பணத்தைச்செலுத்தி கடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தற்போது அதனை பயன்படுத்துவதில் சட்டரீதிரீதியான கரிசனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த கட்டடத்தொகுதிக்கு உரிமம் கோருவதற்கு கொட்டக்கலை பிரதேசசபையோ அல்லது ஏனைய கட்டமைப்புக்களோ முன்வராத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தின் வரலறு ஏழு வருடங்களுக்கு அப்பால் செல்கின்றது. தலவாக்கலை உட்பட பல பகுதிகளிலும் இருந்து சமுர்த்தி பயனாளிகள் தலவாக்கலை நகருக்கு வருகை தருவதால் பத்தனையை அண்டிய பகுதியில் ஒரு சமுர்த்தி வங்கி கிளை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தி இது தொடர்பாக தற்பொழுது சர்ச்சைக்குரிய கட்டிடம் அமைந்துள்ள இடத்தை பெற்றுத் தருமாறு தலவாக்கலை சமுர்த்தி வங்கியினால் அரசதிணைக்களங்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை சமுர்த்தி வங்கிக்கிளையால் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திடமும் கோரிக்கை முன்வைத்து அதற்கான ஒரு வருடத்துக்குள் தமிழருக்குத் தீர்வு – அடுத்த வாரம் பேச்சு ஆரம்பம் என்கிறார் ரணில் “படுகொலைகளுக்கு நீதி கிடை க்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்” வெட்டிப்பேச்சு வேண்டாம்; செயலில் இறங்குங்கள் – அரசிடம் சுரேஷ் இடித்துரைப்பு கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் நடந்தது என்ன? சஜித் பின்வாங்கியது ஏன்??
பத்தத்னை கடைத்தொத்குதி; நடந்தந்து என்ன – Viligal https://viligal.com/16181/ 2/7 இடத்தையும் அடையாளப்படுத்தியுள்ளது. குறித்த இடத்துக்கு கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் 2018.06.2 ஆம் திகதி உறுதிக்கடிதம் வழங்கியுள்ளதுடன் இதற்காக கட்டிட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு 21852.99 ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் அனுமதி வழங்காத நிலையில் மீண்டும் அனுமதி பெற்றுக்கொள்வதற்காக சமுர்த்தி வங்கி 2021.09.07 திகதி கடிதம் ஒன்றை பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த செயற்பாடுகள் இருக்கின்ற பொழுதே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அரசியல் பலம் கொண்ட சிலர் இந்த கட்டடத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் கச்சிதமாக நிர்மாணித்து முடித்துள்ளனர்.
தொடர்ந்து ஒவ்வொரு கடைக்குமான விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு 60 இலட்சம் ரூபா வீதவீம் 5 கடைகளைக்கொண்ட இக்கடைத்தொகுதி 3 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பணத்தைச் செலுத்தி கடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் கடைகளையும் இழந்து பணத்தையும் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொ டர்பாக கொ ட்டகலை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுப்பிரமணியம் ராஜா ‘குறித்த கட்டிடத்தொகுதி அமைப்பதில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. இந்கட்டிடத்தொகுதியை அமைத்த பொழுது கொட்டகலை பிரதேசசபை கண்டும் காணமல் இருந்தது ஏன்? உண்மையில் இங்கு நடந்துள்ளதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் எவ்வளவு பணமரிமாற்றம் நடந்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ’ என்கிறார்.

அமைக்கப்பட்டுள்ள கட்டடதொகுதிக்கும் கொட்டகலை பிரதேச சபைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை . அதனை நாம் அமைக்கவில்லை . மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் அது தொடர்பாக அருகில் உள்ள ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமனி பிரசாந்த் பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ராஜா விற்கு 23.05.2022 அன்று திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் வழங்கியுள்ளார்.
கொட்டகலை பிரதேசசபை எல்லையின் அமைந்துள்ள காட்டு மாரியம்மன் ஆலயத்தின் நுழைவாயின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் தொடர்பானது மேற்குறித்த விடயம் தொடர்பாக கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா 22. 7. 2022 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை என்னிடம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக விடயங்களை தேடி பார்த்து இதற்கான பதிலை தனக்கு பெற்றுத்தருமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதமானது 2022.07 என்ற திகதி தெளிவில்லாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பதில் கிடைக்கப்பெறவில்லை .
27.06.2022 திகதியிடப்பட்ட கொட்டகலை பிரதேச சபையின் தலைவரின் அடுத்த கடிதமானது குறித்த கட்டிடத்திற்கு எந்தவிதமான அனுமதியும் பிரதேச சபையினால் வழங்கப்படவில்லை எனவும் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு ஆலய நிர்வாகத்திற்கு அன்றைய பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது எனவும் இந்த கட்டிடம் அமையப் பெற்றுள்ள இடம் எமது எல்லைக்கு அப்பால் இருப்பதால் அதற்கான வறி அறவிட முடியாது எனவும் குறிப்பிட்டு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ராஜாவிற்கு பதில் வழங்கியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருந்தாலும் 2021.10.27 ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளர் ஏ.ஏ.வி துரசம்பத் பத்தனை கிராம சேவகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திம்புள்ள பத்தனை காட்டுமாரிமுத்து அம்மன் கோவில் அருகில் கட்டிட நிர்மாணிப்பு தொடர்பில் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் பின்வரும் விடயங்களை கேள்விகளாக முன்வைத்து அதற்கான விடைகளை பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த காணியின் உரிமை தொடர்பாகவும் கட்டிட நிர்மாணப்பணிகள் யாரால் முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பாகவும் தற்பொழுது குறித்த கட்டிட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதன் காரணத்தையும் 7 நாட்களுக்குள் தனக்கு அறியத்தருமாறும் பிரதேச செயலாளர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கிராம சேவகர் பதில் வழங்கிய கடிதம் கையெழுத்து இல்லாமல் இருக்கின்றது. இந்த கடிதமானது கைகளால் எழுதப்பட்டுள்ளது. 2021.11.10ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் தமிழ் மொழியில் பின்வரும் பதில்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ் இடமானது முன்னால் வீதிவீதி அதிகாரசபைக்கு மற்றும் கிறேக்லி தோட்டத்திற்கு சொந்தமானது. இடத்தில் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக அன்றிருந்த உப தவிசாளர் எம்.ஜெயகாந்தன் ஆரம்பிக்கப்பட்டது. பத்தனை கிராம அதிகாரி பிரிவில் சில நபர்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அவருடைய கிராம சேவகர் முத்திர குத்தப்படாமல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ஒரு கடிதம் இருக்கின்றது. உண்மையில் இதனை கிராம சேவகர் எழுதினாரா? என்ற சந்தேகம் எழுகின்றது. தங்களுடைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை யார் எதற்காக அமைக்கின்றார்கள் என்ற காரணத்தை தங்களுக்கு தெளிவுபடுத்துமாறு கூறி போரட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன் பயனாக புதிய நிர்வாக சபை ஒன்றை தெரிவு செய்யுமாறு மாவட்ட செயலாளர் உத்தரவிற்கு அமைய அதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவித்தல் ஒட்டப்பட்டது. பத்தனை ஸ்ரீகாட்டுமாரியம்மன் கோவில் பரிபாலன நிர்வாக சபை தேர்வுக்கான கூட்டம் கடந்த மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை பி .ப 2 மணிக்கு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய மண்டபத்தில் நடத்தப்பட்டது. எனவே இக் கூட்டத்திற்கு தவறாது சமூகம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைய குறித்த தினத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பத்தனை பொலிஸ் நிலையத்தின் சார்பாக பொலிஸ்nஉத்தியோகஸ்தர் ஒருவரும் கிரேக்லி தோட்டம் பெய்த்லி தோட்டம் பொரஸ்ட்கிறிக் தோட்டம் டெவன் தோட்டம் ஆகிய தோட்டங்களில் இருந்து பொதுமக்களும் பத்தனை கொலனி மக்களும் கலந்து கொண்டனர். இதன்போது அங்கிருந்தவர்களிடம் ஏற்பட்ட வாக்கவாதம் காரணமாக கூட்டத்தை நடத்த முடியாமல் போயிவிட்டது. ஒவ்வொரு தோட்ட பகுதி மக்களும் ஆலயம் தங்களுக்கு உரியது என கோரினர்.
ஒரு சாரரார் எற்கனவே இதற்கு நிர்வாகசபை இருப்பதாக கூறினர். இதுவரையில் பூஜை செய்து வருகின்ற தரப்பினர் ஆலயத்திற்கு எந்தவிதமான நிர்வாக சபையும் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக இல்லை எனவும் குறிப்பிட்டனர். இவ்வாறான ஒரு நிலையில் வருகை தந்திருந்த அரச அதிகாரிகள் இது தொடர்பாக தாம் மாவட்ட செயலாளருக்கு அறிவித்து பதிலை பெற்றுத் தருவதாக கூறி கூட்டத்தை நிறுத்தி விட்டனர்
இது தொடர்டபாக தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக நுவரெலியா பிரதேச சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் அளித்துள்ள பிரதேச சபையின் செயலாளர் எச்.டி.எஸ்.விக்கிரமசிங்ஹ ‘2043 – 57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாணியின் ஊடாக 2018.03.20 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசசபையின் அதிகார பிரிவில் அமைந்துள்ளதால் அவ்விடமானது கொட்டகலை பிரதேசசபை அதிகார எல்லைக்குள் அமைந்ததன் ஊடாக அக்காணி அவ்விடத்தில் அமைந்துள்ள ஆலய பரிபாலன சபையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அக்கடைத்தொகுதியினை அமைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதே கடிதத்தில் குறித்த கடைத் தொகுதிக்கான கட்டட அனுமதி பத்திரம் நுவரெலியா பிரதேச சபையாக இருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொது மக்கள் சிலர் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள். 54 வயதான பெரியசாமி கணேசன் ‘இந்த கட்டிடத்தொகுதியை சமூர்த்தி வங்கி கிளைக்கு அமைக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது. எனவே அந்த சமூர்த்தி வங்கிக கிளையை இங்கு முகப்பு ஆரம்பித்தால் பொது மக்கள் பெரும் நன்மை அடைவார்கள்.
51 வயதான பாலன் சுந்தரலிங்கம் இந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் இல்லாவிட்டால் இதனை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொண்டு அரசாங்க காரியா லயங்களை அமைத்து மக்களுக்கான சேவையை வழங்கலாம். அல்லது ஒரு தொழில் பயிற்சி கூடமாக மாற்றி அமைக்கலாம்’ என்றார். 37 வயதான சுந்தரம் சிவகுமார் ‘இந்த கட்டிடத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்று இங்கிருக்கின்ற இளைஞர் யுவதிகளின் சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கும் முகமாக சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கலாம். அதன் மூலம் மேலும் சிலருக்கான வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது’ என்றார். 37 வயதான அழகன் ராஜதுறை இந்த கட்டடத்தை கொட்டகலை பிரதேச சபை பொறுப்பேற்று விலை மனுகோரி வர்த்தக நடவடிக்கைக்கு கையளிக்க முடியுமாக இருந்தால் அதன் மூலமாக பிரதேச சபைக்கு வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் கொட்டகலை பிரதேச சபை இதன் நிர்வாகத்தையும் முறையாக செய்ய முடியும்.
நுவரெலியா எஸ்.தியாகு
Leave a comment